செய்திகள்

நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலை

Published On 2018-07-17 21:29 GMT   |   Update On 2018-07-17 21:29 GMT
நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை கேரள அரசு வழங்கியது. #Nipahvirus
திருவனந்தபுரம் :

கேரள மாநிலத்தை சமீபத்தில் உலுக்கிய நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் வரை பலியாகினர். நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கியவர்களுக்கு மருத்துவ உதவிகளை மேற்கொண்டு வந்த லினி என்ற நர்சும் நிபா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார். 

ப்க்ரைனில் பணிபுரிந்து வரும் தன்னுடைய கணவரை சந்திக்க முடியாது என்ற நிலையில் லினி எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று இணையத்தில் வைராலானது.

மேலும், நிபா வைரசால் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவருக்கு அரசு  வேலை மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்திருந்தது. 

இந்நிலையில், லினியின் கணவர் சஜேஷ்க்கு, கோழிக்கோடு மாவட்ட சுகாதார அதிகாரியின் கீழ் பணியாற்றும் கிளர்க் வேலைக்கான பணி ஆணையை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி  விஜயன் , ‘ லினியின் குடும்பத்திற்கு அறிவித்திருந்த நிவாரண உதவிகள் அனைத்தையும்  அரசு நிறைவேற்றிவிட்டது’ என தெரிவித்துள்ளார்.  #Nipahvirus           
Tags:    

Similar News