செய்திகள்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே செப்.12-ம் தேதி டெல்லி வருகை

Published On 2018-07-17 08:38 GMT   |   Update On 2018-07-17 08:38 GMT
பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமியின் அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி டெல்லி வருகிறார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi
புதுடெல்லி:

பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா தத்துவத்தை விட்டு விலகாமல் இருக்க இந்து இளைஞர்களை ஒன்றிணைப்பது, பசுவதை தடுப்பு மற்றும் பா.ஜ.க. அரசுக்கு சில விவகாரங்களில் அழுத்தம் அளிப்பது உள்ளிட்டவை இந்த அமைப்பின் நோக்கம் என்று விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் அறிமுக விழாவின்போது சுப்ரமணியசாமி குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி டெல்லியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு  இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு சுப்ரமணியசாமி அழைப்பு விடுத்திருந்தார்.

அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர சம்மதித்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்ரமணியசாமி இன்று பதிவிட்டுள்ளார். #MahindaRajapaksa #RajapaksavisitsDelhi 
Tags:    

Similar News