செய்திகள்

நீட் கருணை மதிப்பெண்கள் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது சிபிஎஸ்இ

Published On 2018-07-16 08:37 GMT   |   Update On 2018-07-16 08:37 GMT
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. #NEET #NEETGraceMarks #CBSEAppeal
புதுடெல்லி:

நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.



இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று தகவல் வெளியானதும், வழக்கு தொடுத்த டி.கே.ரங்கராஜன் எம்.பி, ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. #NEET #NEETGraceMarks #CBSEAppeal
Tags:    

Similar News