செய்திகள்

ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிருக்கு போராடியவர்களுடன் செல்பி எடுக்க போட்டி

Published On 2018-07-11 12:23 GMT   |   Update On 2018-07-11 12:23 GMT
ராஜஸ்தானில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்யாமல் அருகே இருந்தவர்கள் செல்பி மற்றும் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர் :

ராஜஸ்தான் மாநிலம், பார்மேர் மாவட்டம் சோடான் எனும் இடத்தில் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பள்ளி பேருந்து மோதி இன்று விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் சாலையோரம் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரடினர்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு அருகே இருந்த சிலர், விபத்தில் சிக்கிய 3 பேரையும் காப்பற்ற முயற்சி செய்யாமல் தங்களது செல்போன்களை எடுத்து  உயிருக்கு போரடியவர்களுடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சாலையோரம் கிடந்தவர்களுடன் ஒருவர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ விபத்தில் சிக்கிய 3 பேரும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக சாலையோரம் உயிருக்கு போராடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு யாரும் உதவ முன்வராததால் அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட உடன் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒருவேலை அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்’ என தெரிவித்தார்.

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்யாமல் அருகே இருந்தவர்கள் செல்பி எடுத்த சம்பவம் மக்களிடையே மனிதநேயம் மரித்துக்கொண்டு வருவதற்கான மேலும் ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News