செய்திகள்

டெல்லியில் மரங்களை வெட்ட ஜூலை 4 வரை தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-06-25 08:31 GMT   |   Update On 2018-06-25 08:31 GMT
டெல்லியின் மேம்பாட்டு பணிக்காக சில பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜூலை 4 வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #delhihighcourt #NBCC
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள சரோஜினி நகர், நரோஜி நகர், நேதாஜி நகர், தியாகராஜ நகர்,மொகமத்பூர் மற்றும் கஸ்தூர்பா நகர்  ஆகிய ஆறு காலனி பகுதிகளை மேம்படுத்த உள்ளதாக தேசிய கட்டிட கட்டுமான கழகம் அறிவித்திருந்தது. அதற்காக 20 ஆயிரம் மரங்கள் வெட்டபடும் என குறிப்பிட்டனர். இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மரங்களை வெட்ட கூடாது என பலர் போராட்டம் நடத்தினர். அரசின் திட்டத்தினை எதிர்த்து  மருத்துவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை இன்று விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுத்த விசாரணை வரும் வரை அதாவது ஜூலை 4 வரை மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்ட தீர்ப்பில், மரங்களை வெட்ட பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதா?. மேலும், வீடுகள் கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என தேசிய கட்டிட கட்டுமான கழகத்திடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


இந்த திட்டத்தை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்கள் மரங்களை கட்டிப்பிடித்து போராட்டம் நடத்தினர். வெட்டப்படும் மரங்களுக்கு சமமாக மரக்கன்றுகளை நடுவோம் என்ற அரசின் பதிலையும் அவர்கள் ஏற்கவில்லை. ஒரு வளர்ச்சியடைந்த மரத்திற்கு பதிலாக ஒரு செடியை தருவது எவ்வாறு ஈடாகும் என மக்கள் கேள்வி எழுப்பினர். #delhihighcourt #NBCC

Tags:    

Similar News