செய்திகள்

சியாச்சின் உச்சியில் ராணுவ வீரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் யோகா பயிற்சி

Published On 2018-06-21 09:40 GMT   |   Update On 2018-06-21 09:40 GMT
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சியாச்சினில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்சியில் ராணுவ வீரர்களுக்கு, ஜக்கி வாசுதேவ் யோகா பயிற்சி அளித்தார். #InternationalYogaDay2018
ஸ்ரீநகர் :

2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலம், சியாச்சினில் 350 ராணுவ வீரர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில், ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் சிகரம் உள்ளது.  உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது.

குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #InternationalYogaDay2018
Tags:    

Similar News