செய்திகள்

பிச்சை எடுத்து கழிவறை கட்டிய தம்பதியர் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக நியமனம்

Published On 2018-06-06 14:52 GMT   |   Update On 2018-06-06 14:52 GMT
பிச்சை எடுத்து சேமித்த பணத்தின் மூலம் கழிவறை கட்டிய தம்பதியரை பிகார் மாநில மாவட்ட நிர்வாகம் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக நியமனம் செய்துள்ளது. #CleanIndia
பாட்னா :

பிகார் மாநிலம், மங்கேர் மாவட்டத்தில் உள்ள ஹெம்ஜாபூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர்களான மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் பணவசதி இல்லாத காரணத்தால் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குடிசை வீட்டில் வசிக்கும் இவர்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை விரும்பாமல் தனியாக கழிவறை ஒன்று கட்ட வேண்டும் என நினைத்தனர்.

ஆனால், பணம் இல்லாத காரணத்தினால் தம்பதியர் இருவரும் பிச்சை எடுத்து கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியை சேமிக்க தொடங்கினர். இவ்வாறு சேமித்த பணத்தில் மனோஹர் சவுத்ரி மற்றும் முசோ தேவி ஆகியோர் அவர்களது குடிசை வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றை கட்டியுள்ளனர்.

இந்த செயலைக் கண்டு வியந்த மங்கேர் மாவட்ட நிர்வாகம் பிச்சைக்கார தம்பதியரை அம்மாவட்ட தூய்மை இந்தியா திட்டதிற்கு தூதர்களாக நியமனம் செய்து அறிவித்தது. மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் படி கழிவறை கட்டுவோருக்கு அரசு வழங்கும் 12 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு வழங்கியுள்ளது. #CleanIndia
Tags:    

Similar News