செய்திகள்

இளைய தலைமுறையை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு அரசு உதவும் - பிரதமர் மோடி பேச்சு

Published On 2018-06-06 06:29 GMT   |   Update On 2018-06-06 06:29 GMT
இந்திய அரசாங்கம் இளைய தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். #PMModi #InnovationKiBaatPMKeSaath
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி டேராடூன், கவுகாத்தி மற்றும் ராய்ப்பூர் உட்பட பல நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

இந்தியாவில் பல இளைஞர்கள் புதிய தொழிலை தொடங்க ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவர்களிடம் போதுமான பணம் இல்லாததால் தொடங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் மேக் இன் இந்தியா மற்றும் டிசைன் இன் இந்தியா போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இளைஞர்களும் தொழில் தொடங்க ஆசைப்படுகின்றனர். தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் திட்டங்களில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் இளைஞர்கள் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

இளைஞர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றனர். அதற்காக அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. அவர்களின் முன்னேற்றத்திற்காக அரசு உதவி வருகிறது என கூறினார். #PMModi #InnovationKiBaatPMKeSaath

Tags:    

Similar News