செய்திகள்

சர்வதேச சிறுபான்மையினரை குஷிப்படுத்த முயற்சிக்கிறாரா மோடி ? அகிலேஷ் யாதவ் கேள்வி

Published On 2018-06-04 11:18 GMT   |   Update On 2018-06-04 11:18 GMT
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை குஷிப்படுத்த முயற்சிக்கிறாரா என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். #NarendraModi #AkhileshYadav
லக்னோ :

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில்  சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது :- 

பிரதமர் மோடி தான் ஒரு இந்து என்றும், அதனால் இஸ்லாமிய பண்டிகைகளை கொண்டாட மாட்டேன் எனவும் முன்பு தெரிவித்திருந்தார். ஆனால்,  5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு கடந்த மாதம் 29-ம் தேதி பிரதமர் மோடி சென்றார்.

அப்போது, இந்தோனேஷிய நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதியான இஸ்டிக்லால் மசூதிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள சூலியா எனப்படும் மசூதிக்கு சென்று பார்வையிட்ட அவர் பச்சை நிற ஆடை ஒன்றை மசூதிக்கு பரிசாக வழங்கினார். 

ரம்ஜான் கொண்டாட உள்ள சமயத்தில் இஸ்லாமியர்கள் கணிசமாக வசிக்கும் நாடுகளுக்கு பிரதமர் சென்றுள்ளார். அங்கிருக்கும் மசூதிகளை பார்வையிடுகிறார். எனவே, சர்வதேச நாடுகளில் உள்ள சிறுபான்மையினரை குஷிப்படுத்தும் நோக்கில் பிரதமர் இவற்றை எல்லாம் செய்கிறாரா ? 

இவ்வாறு அகிலேஷ் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். #NarendraModi #AkhileshYadav
Tags:    

Similar News