செய்திகள்

மே 29-ல் 5 நாட்கள் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2018-05-24 12:28 GMT   |   Update On 2018-05-24 12:28 GMT
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். #PMModi #ForeignVisit






புதுடெல்லி:

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் ஐந்து நாட்கள் பயணமாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். அப்போது இரு நாட்டு தலைவர்களையும் சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடி விவாதிப்பார் என கூறப்படுகிறது.

ஜூன் 1-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்கிரி-லா  உரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ப்ரீத்தி சரண் கூறியுள்ளார். இதில் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய தலைவர் மோடி ஆவார்.

இந்த பயணத்தின் போது  இந்தியா - சிங்கப்பூர் இடையில் சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. இது சிங்கப்பூருக்கு மோடி செல்வது இரண்டாவது முறையும், இந்தோனேசியாவுக்கு செல்வது முதல் முறையும் ஆகும். #PMModi #ForeignVisit
Tags:    

Similar News