செய்திகள்

ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்துக்கு முதலிடம்

Published On 2018-05-22 00:03 GMT   |   Update On 2018-05-22 00:03 GMT
இந்தியாவில் ஊழல் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNadu #mostcorruptstate #CMSIndia #CorruptionStudy2018

புதுடெல்லி:

சி.எம்.எஸ். இந்தியா என்ற தனியார் நிறுவனம் ஒன்று, ஊழல் ஆய்வு 2018 என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள மாநிலங்கள் குறித்து நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதாக அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. ஊழல் பட்டியலில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் தெலங்கானா, 4-வது இடத்தில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளதாகவும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கா்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. #TamilNadu #mostcorruptstate #CMSIndia #CorruptionStudy2018
Tags:    

Similar News