செய்திகள்

பீகாரில் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்

Published On 2018-05-17 09:47 GMT   |   Update On 2018-05-17 09:47 GMT
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் 1000 அட்டைப் பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாட்னா:

மதுவிலக்கு சட்டம் நடைமுறையில் உள்ள பீகார் மாநிலத்தில் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்யும் நபர்கள், மதுபான கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபான கடத்தலை தடுப்பதற்காக தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படுகிறது.

அவ்வகையில், வைசாலி மாவட்டத்தின் மஹுவா - தாஜ்பூர் சாலையில் நேற்று இரவு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியை காவல்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே வைத்து மறைத்து 1000 அட்டைப்பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக பல்கர் சிங், குர்பிரீத் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மது கடத்தலில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிடிக்கும் தீவிர முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

பீகாரில் இதுபோன்ற மதுபானம் மற்றும் போதை பொருட்களின் கடத்தல் சமீப காலங்களில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #liquorseized #bihar
Tags:    

Similar News