செய்திகள்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 10 தனி கோர்ட்டுகள் செயல்பட தொடங்கின

Published On 2018-05-02 02:58 GMT   |   Update On 2018-05-02 02:58 GMT
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக 12 தனி கோர்ட்டுகள் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதில் 10 கோர்ட்டுகள் தொடங்கி, அவை செயல்பட தொடங்கி விட்டன.
புதுடெல்லி:

நாடு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு 12 தனி கோர்ட்டுகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதற்கான நிதியை (சுமார் ரூ.7 கோடியே 80 லட்சம்) ஒதுக்குமாறும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

அதன்படி, 12 தனி கோர்ட்டுகளில் 10 தனி கோர்ட்டுகள் தொடங்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்து விட்டன. தமிழ்நாட்டிலும், உத்தரபிரதேசத்திலும்தான் இந்த கோர்ட்டுகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்காவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில், “எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான 1,581 குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக 12 தனி கோர்ட்டுகள் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதில் 10 கோர்ட்டுகள் தொடங்கி, அவை செயல்பட தொடங்கி விட்டன. தமிழ்நாட்டிலும், உத்தரபிரதேசத்திலும் தலா ஒரு தனி கோர்ட்டு விரைவில் செயல்பட தொடங்கி விடும்” என கூறப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News