செய்திகள்

மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக கமல் நாத் நியமனம்

Published On 2018-04-26 10:34 GMT   |   Update On 2018-04-26 10:34 GMT
மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவர்களுல் ஒருவரான கமல் நாத் நியமிக்கப்பட்டுள்ளார். #INC #MadhyaPradeshstatechief #KamalNath

புதுடெல்லி:

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக கமல் நாத் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மேலிடம் இதை அறிவித்துள்ளது. தேர்தல் பிரசார குழு தலைவராக ஜோதிரத்யா சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாலா பச்சன், ராம்நிவாஸ் ராவத், இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜித்து பட்வாரி, சுரேந்திர சவுத்ரி ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கோவா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஷந்தாராம் நாயக் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஷ் சோதன்கர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். #INC #MadhyaPradeshstatechief #KamalNath
Tags:    

Similar News