செய்திகள்

வங்கி கடன் மோசடியில் தொடர்புடையவர்களின் ரூ.17 ஆயிரம் கோடி சொத்துகள் அவசர சட்டத்தில் பறிமுதல்

Published On 2018-04-24 18:53 GMT   |   Update On 2018-04-24 18:53 GMT
வங்கி கடன் மோசடி மற்றும் பண மோசடியில் தொடர்புடையவர்களின் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

தொழில் அதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்டோர் வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். இது போன்று வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் குற்றவாளிகளை தண்டிக்க பொருளாதார குற்றவாளிகள் அவசர சட்டத்துக்கு கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

ஏற்கனவே விஜய் மல்லையாவின் ரூ.9 ஆயிரத்து 890 கோடி சொத்துகளையும், நிரவ் மோடியின் ரூ.7 ஆயிரத்து 664 கோடி சொத்துகளும் அமலாக்கத்துறையால் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் புதிய அவசர சட்டத்தின்படி விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி மட்டும் அல்லாமல் வங்கி கடன் மோசடி மற்றும் பண மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியவர்கள் மற்றும் இந்தியாவில் இருப்பவர்களின் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News