செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் - நஞ்சன்கூடு தொகுதியில் எடியூரப்பா மகன் மனுதாக்கல்

Published On 2018-04-24 05:11 GMT   |   Update On 2018-04-24 05:11 GMT
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா மகன் நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். #KarnatakaElections2018 #Yeddyurappa
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பாவின் மகன் நேற்று திடீரென்று மைசூரு நஞ்சன்கூடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர் வருணா தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் ரகளையில் ஈடுபட்டனர். அமித்ஷாவுக்கு எதிராக கோ‌ஷங்களையும் எழுப்பினார்கள். இன்று 2-வது நாளாகவும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருணா தொகுதியில் தற்போதைய முதல் மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இவரை எதிர்த்து போட்டியிட்டால் தான் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை கொடுக்க முடியும் என்று பாரதிய ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதை பாரதிய ஜனதா மேலிடம் ஏற்குமா? என்பது தெரியவில்லை.  #KarnatakaElections2018 #BJP #Yeddyurappa #Vijayendra
Tags:    

Similar News