செய்திகள்

கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் - பாஜக தலைவருக்கு சித்தராமையா கோரிக்கை

Published On 2018-04-22 17:36 GMT   |   Update On 2018-04-22 17:36 GMT
கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பாஜக பொதுச்செயலாளர் முரளிதரராவிடம், எனக்கு ஹிந்தி தெரியாது, எனவே கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள், என்று டுவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். #Siddaramaiah #MurlidharRao

பெங்களூரு:

224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் மே 12-ந் தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் தாக்கலும், பிரசாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகா முதல்வர் சித்தராமையா இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. இதை கிண்டல் செய்யும் விதமாக பாஜக பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஹிந்தியில் ஒரு டுவிட் பதிவு செய்திருந்தார்.

அந்த டுவிட்டில், "அதிக ஆய்விற்கு பின் நீங்கள் சாமுண்டேஸ்வரி தொகுதியை போட்டியிட தேர்வு செய்தீர்கள். ஆனால் அங்கு தோற்றுவிடுவோம் என்று தெரிந்த உடன் இரண்டாவது தொகுதியை தேர்வு செய்துள்ளீர்கள். உங்கள் சந்தேகத்தை நான் தீர்க்கிறேன். இரண்டு தொகுதி மட்டுமல்ல, மொத்த கர்நாடகாவும் காங்கிரஸ் இல்லாத மாநிலமாகும்'' என கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த சித்தராமையா, ‘ஐயா. கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள். எனக்கு ஹிந்தி புரிந்து கொள்ள முடியாது’ என்று கன்னடத்திலேயே பதில் அளித்துள்ளார்.



இதையடுத்து முரளிதரராவ் கடைசியாக சித்தராமையா வழிக்கு வந்தார். ஹிந்தியில் அவர் எழுதி இருந்ததை போலவே, கன்னடத்தில் காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்குவோம் என எழுதி சித்தராமையாவிற்கு பதில் அளித்தார்.

இதற்கு பதில் அளித்த சித்தராமையா ''என்னுடைய விதியை இரண்டு தொகுதியிலும் இருக்கும் மக்கள் முடிவு செய்வார்கள். நீங்கள் அதை பற்றி கவலைபட வேண்டாம். ஆனால் உங்களுக்கு கன்னடத்தில் டிவிட் செய்ய கற்றுக்கொடுத்த வரை எனக்கு சந்தோசம்'', என பதில் அளித்துள்ளார். #Siddaramaiah #MurlidharRao #tamilnews
Tags:    

Similar News