செய்திகள்

ராஜஸ்தான் - வருமான வரித்துறை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து ரூ.2 கோடி தங்கம் கொள்ளை

Published On 2018-04-22 14:56 GMT   |   Update On 2018-04-22 14:56 GMT
ராஜஸ்தான் மாநிலத்தில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தினுள் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோட்டா நகரில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வருமான வரித்துறை துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது.

பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது பிடிபட்ட தங்கம் இந்த அலுவலகத்தில் உள்ள அலமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தனர். பின்னர், அலமாரியை உடைத்து உள்ளே இருந்த பாதுகாப்பு பெட்டக சாவியை எடுத்தனர்.

பெட்டகத்தின் உள்ளே இருந்த சுமார் 2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றனர்.
இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரின் அடைப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News