செய்திகள்

பா.ஜ.க.வினர் முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும்- சத்ருகன் சின்கா சவால்

Published On 2018-04-22 09:28 GMT   |   Update On 2018-04-22 09:28 GMT
பாரதிய ஜனதா கட்சியினர் முடிந்தால் என் மீது நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும் என்று சத்ருகன் சின்கா சவால் விடுத்துள்ளார். #ShatrughanSinha #BJP
பாட்னா:

பாரதிய ஜனதா மூத்த தலைவர்களான யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா எம்.பி. ஆகியோர் மோடி பிரதமர் ஆனதில் இருந்தே அவரை எதிர்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யஷ்வந்த்சின்கா பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். அதே நேரத்தில் நடிகர் சத்ருகன் சின்கா ஆட்சியை கடுமையாக விமர்சித்து இருப்பதுடன் கட்சிக்கு சவால் விடுத்து பேசி உள்ளார்.

பாட்னாவில் ராஷ்டீரிய மஞ்ச் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் சத்ருகன் சின்கா கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

பீகார் சட்டசபை தேர்தல் நடந்த காலத்தில் இருந்தே கட்சி என் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக கேள்விப்பட்டு வருகிறேன். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளலாம். முடிந்தால் அவர்கள் நடவடிக்கை எடுத்து பார்க்கட்டும்.

நியூட்டனின் 3-வது விதியின்படி ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்கும் என்பதை அவர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

நான் பாரதிய ஜனதாவில் இருந்து ஒரு போதும் விலக மாட்டேன். பாரதிய ஜனதா தான் எனது முதல் கட்சி. கடைசி கட்சியும் பாரதிய ஜனதாதான். இதை இப்போதும் நான் உறுதிபட தெரிவித்து கொள்கிறேன்.

மத்தியில் இருப்பது அலிபாபா மற்றும் 40 திருடர்களின் அரசு என்பதை மக்கள் தெரிந்து வருகின்றனர்.

இவ்வாறு சத்ருகன் சின்கா கூறினார். #ShatrughanSinha #BJP
Tags:    

Similar News