செய்திகள்

மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது- திரிபுரா முதல்வர்

Published On 2018-04-18 08:26 GMT   |   Update On 2018-04-18 08:26 GMT
மகாபாரத காலத்திலேயே இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் இருந்ததாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்து உள்ளார். #BiplabDeb
அகர்தலா:

அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திரிபுரா முதல் மந்திரி பிப்லாப் தேப்  கூறுகையில், “இணையதள பயன்பாடு என்பது மகாபாரத காலத்திலிருந்தே உள்ளது. கண்பார்வையற்ற திரிதராஷ்டிரர், குருசேத்ர யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, போர்க்களத்தின் அருகே இல்லாதபோதே, அங்கு நடைபெறும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார். இது அப்போது இருந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பின் மூலமே சாத்தியமானது.

ஐரோப்பிய யூனியன்கள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணையளதம் தங்கள் கண்டுபிடிப்பு என கூறலாம். ஆனால், உண்மையில், இவை அனைத்தும் இந்தியாவின் தொழில்நுட்பம் தான். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இணையதளம் மற்றும் செயற்கைகோள்கள் இருந்துள்ளன. மிகவும் பணக்கார கலாசாரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது. இன்றும் கூட இணையதளம் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பத்தில் நாம் முன்னோடியாக இருக்கிறோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் கூட, அந்த நிறுவனத்தில் பெரும்பாலான என்ஜினியர்கள் நமது நாட்டைச்சேர்ந்தவர்களே” என்றார். 

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைவருக்கும் இன்டர்நெட் சேவையை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். 

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News