செய்திகள்

புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் ஒடிசா போலீஸ்

Published On 2018-04-17 10:03 GMT   |   Update On 2018-04-17 10:03 GMT
ஒடிசாவில் புறா கால்களில் செய்திகள் அடங்கிய காகிதத்தை கட்டி ஒரு காவல் நிலையத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஷ்வர்:

தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் புறாக்கள் செய்திகள் அனுப்ப பயன்படுத்தப்பட்டன. புறாக்களின் மூலம் செய்தி அனுப்பப்படும்போது அவை மெல்லிய தாளில் எழுதப்பட்டு ஒரு குழலில் அடைக்கப்பட்டு அவற்றின் கால்களில் இணைக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற புறாக்கள் 75 கிராம் எடை வரை கொண்டுசெல்ல வல்லவையாகும்.

பின்னர் செல்போன், இணையம் போன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில் புறா மூலம் செய்தி அனுப்புவது குறைந்து விட்டது. இந்நிலையில், ஒடிசா காவல்நிலையங்களில் இன்றளவும் புறாக்கள் மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன.


ஒடிசாவில் 1946-ம் ஆண்டு புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் சர்வீஸ் தொடங்கப்பட்டது. முதலில் 200 புறாக்கள் இதற்காக வளர்க்கப்பட்டு வந்தன. பின்னர் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு சர்வீஸ் குறைந்தது. இருப்பினும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நேரத்தில் புறாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இவை புவனேஷ்வரிலிருந்து கத்தாக் நகருக்கு ஒரு மணி நேரத்தில் கடந்து செய்திகளை அனுப்புகின்றன. இதற்காக புறாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் ஒடிசாவில் இன்னும் புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

Tags:    

Similar News