செய்திகள்

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு உடல்நலக்குறைவு

Published On 2018-04-05 07:06 GMT   |   Update On 2018-04-05 07:06 GMT
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சிறுநீரக தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. #ArunJaitley
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி (65) திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவரை அணுகியுள்ளார். அமைச்சரின் உடல்நிலையை முழுவதும் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஜெட்லி இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படாத போதும், நோயின் வீரியத்தன்மை காரணமாக அரசு தொடர்பாக நடைபெறும் எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முன்னதாக பதவிக்காலம் முடிவடைந்த பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வடமாநில சட்டசபைகளில் சமீபத்தில் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலில் பேரில் ராஜ்ய சபாவின் ஆளும் கட்சி தலைவராக அருண் ஜெட்லி மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையில் உடல் நலக்குறைவால் கடந்த திங்கள் கிழமை முதல் ஜெட்லி அலுவலகத்திற்கு செல்லவில்லை என்றும், எம்.பி பதவியேற்பு உறுதிமொழி ஏற்கவும் அவர் வரவில்லை என தகவல்கள் கசிந்துள்ளது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் ஜெட்லியின் இல்லத்திலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. #ArunJaitley

Tags:    

Similar News