செய்திகள்

பஞ்சாப் எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்

Published On 2018-03-14 07:51 GMT   |   Update On 2018-03-14 07:51 GMT
பஞ்சாப் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் கடத்தி வந்த ரூ.45 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் எல்லையில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பாதுகாப்பு படையுனருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வீரர்கள் இன்று காலை கால்ரா பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் நாட்டின் கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிலர் போதைப்பொருளை இந்தியாவிற்கு கடத்த முயன்றனர். அவர்கள் ஹெராயின் அடங்கிய பண்டல்களை எல்லை பாதுகாப்பு வேலி வழியாக இந்திய பகுதிக்குள் வீறியுள்ளனர்.

அதைக்கண்ட எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்ட உடன் அவர்கள் காட்டுப்பகுதிக்குள் ஓடிச்சென்றனர். அதன்பின் அந்த பண்டல்களை எடுக்க வந்த இந்தியாவைச் சேர்ந்த கடத்தல்காரரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர் அமிர்தசரசைச் சேர்ந்த பல்பீர் சிங் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ ஹெராயின் பண்டல்களின் மொத்த மதிப்பு 45 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
Tags:    

Similar News