செய்திகள்

உலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் - மாணவிகளுக்கு கனடா பிரதமர் மனைவி அறிவுரை

Published On 2018-02-23 01:15 GMT   |   Update On 2018-02-23 01:15 GMT
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், உலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், உலகை பயமின்றி எதிர்கொள்ளுங்கள் என மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் தாஜ்மஹாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார்.



அதன்பின்னர், குஜராத் சென்ற அவர் காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார்.

இதற்கிடையே, நேற்று டெல்லியில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தனர். அப்போது, இந்திய மாணவிகள் இடையே பேசும் நிகழ்ச்சியில் கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடோ கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், பெண்களாக வளர்வதில் நீங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடுகிறது. அதனால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகிறீர்கள். எனவே நீங்கள் துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களால் இந்த உலகை பயமின்றி தைரியமாக துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும்.

நான் மன்னர்கள், ராணிகள் மற்றும் பிரபலமானவர்களை சந்தித்து வருகிறேன். ஆனால் அவர்களை பார்ப்பதை விட உங்கள் வயதுடைய பெண்களை பார்க்கும்போது தான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்களுடன் பேசி பழகிய அனுபவங்களை எனது மகள், மகனுக்கு அவசியம் சொல்வேன் என குறிப்பிட்டுள்ளார். மாணவிகளுடன் கலந்துரையாடிய சோபி ட்ரூடோ, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
Tags:    

Similar News