செய்திகள்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் விருந்தில் கலந்துகொள்ளும் திருநங்கை மாணவர்

Published On 2018-02-19 15:08 GMT   |   Update On 2018-02-19 15:08 GMT
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனஞ்ஜெய் சவுஹான் என்ற திருநங்கை மாணவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான விருந்தில் கலந்து கொள்ள உள்ளார். #JustinTrudeau
சண்டிகர்:

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த அவர் நேற்று தாஜ்மஹாலுக்கு சென்று சுற்றிப்பார்த்தார். குஜராத் மாநிலம் சமர்பதியில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு இன்று சென்ற ஜஸ்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று கண்டு களித்தார். பின்னர், பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு அவர் புறப்பட்டார்.

அப்போது விமான நிலையத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவரை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில், வரும் வியாழக்கிழமை டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் ட்ரூடோ உடனான விருந்தில் கலந்து கொள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் தனஞ்ஜெய் சவுஹான் என்ற திருநங்கை மாணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் கடமைகள் படித்து வரும் தனஞ்ஜெய் சக்‌ஷாம் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வருகிறார். இதன் மூலம் திருநங்கைகளுக்கு பல உதவிகள் அவர்களின் நலனுக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு பல்கலைக்கழக வளாகத்தில் திருநங்கைகளுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கனடா தூதர் நாதிர் படேலை தனஞ்ஜெய் அழைத்திருந்தார்.

இதன் காரணமாக, தற்போது ஜஸ்டின் உடன் விருந்து உண்பதற்காக தனஞ்ஜெய் சவுஹானுக்கு கனடா தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. #JustinTrudeau #TamilNews
Tags:    

Similar News