செய்திகள்
முகமது உபேக்

சித்தூர் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த ஓமன் நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2018-02-19 07:50 GMT   |   Update On 2018-02-19 07:50 GMT
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த ஓமன் நாட்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமலை:

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனை சேர்ந்தவர் முகமது உபேக். இவர், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். கல்லூரி விடுதி அருகே அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு அறையில் இருந்த முகமது உபேக், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து முகமது உபேக் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த சக மாணவர்கள், ஜன்னல் வழியாக அறைக்குள் பார்த்தனர். அப்போது, முகமது உபேக் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, மாணவர் முகமது உபேக், ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News