செய்திகள்

பெங்களூரு மதுபாரில் கைகலப்பு - இளைஞர் காங்கிரஸ் தலைவர் 6 ஆண்டுகள் இடைநீக்கம்

Published On 2018-02-19 07:44 GMT   |   Update On 2018-02-19 07:44 GMT
கர்நாடக எம்.எல்.ஏ. ஹாரிசின் மகனும், இளைஞர் காங்கிரசின் தலைவருமான முகமத் ஹாரிஸ் நளாபத் ஓட்டலில் ஒரு நபரை அடித்த குற்றத்திற்காக 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் பெங்களூவில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹாரிசின் மகனும், பெங்களூரு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான முகமத் ஹாரிஸ் கடந்த சனிக்கிழமை மதுக்கடையில் வித்வாத் என்ற நபரை அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வித்வாத்தின் நண்பர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமத் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய காரணத்தால் முகமத் ஹாரிஸ் 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். தவறு செய்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முகமத்திற்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews

Tags:    

Similar News