செய்திகள்

3 தலித் வாலிபர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை

Published On 2018-01-20 08:18 GMT   |   Update On 2018-01-20 08:18 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேல்சாதி பெண்ணை காதலித்த தகராறில் மூன்று தலித் வாலிபர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆறு பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மராத்திய பெண்ணை தலித் வாலிபரான சச்சின் காரு என்பவர் காதலித்தது தொடர்பாக இரு சமூகத்தார் இடையே மோதல் வெடித்தது. சோனாய் கிராமத்தில் நிகழ்ந்த இந்த மோதலில் சச்சின் காரு(24), சந்தீப் தன்வர்(25), ராகுல் கன்டாரே(20) ஆகியோர் கடந்த 1-1-2013 அன்று கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

அவர்களின் உடல் பாகங்கள் பாதாள சாக்கடையில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் சிலர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கில் ஆறுபேரை குற்றவாளிகள் என கடந்த 15-ம் தேதி கோர்ட் அறிவித்தது.

இந்நிலையில், குற்றவாளிகளான ரகுநாத் டரான்டாலே(52), ரமேஷ் டரான்டாலே(42), பிரகாஷ் டரான்டாலே(38), பிரவீன் டரான்டாலே(23), அசோக் நவ்கிரே(32) சந்தீப் குர்ஹே(37) ஆகிய ஆறுபேருக்கும் மரண தண்டனை மற்றும் தலா 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆர்.ஆர்.வைஷ்னவ் இன்று உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News