செய்திகள்

14 வகை பத்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கது தான்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

Published On 2018-01-17 10:38 GMT   |   Update On 2018-01-17 10:38 GMT
இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கதுதான் என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மும்பை:

பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக சமீபகாலமாக வகைவகையான நாணயங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒருமாதிரியாக இருப்பதால் பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களும், பொதுமக்களும் சிலவகை நாணயங்களை வாங்க மறுத்து வருவதாக பரவலாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக இன்று விளக்கம் அளித்துள்ள மத்திய ரிசர்வ் வங்கி, அரசுக்கு சொந்தமான கூடங்களில் தயாரிக்கப்படும் நாணயங்கள் பல்வேறு சமூக, பொருளாதார, கலாசார அடையாளங்களுடன் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இந்த நாணயங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் நிலவி வருவதாக தெரிகிறது.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லத்தக்கதுதான் என்பதை தெரிவித்து கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பத்து ரூபாய் நாணயங்களை பணப் பரிவர்த்தனை மற்றும் பண மாற்றத்துக்கு ஏற்றுகொள்ள வேண்டும் எனவும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News