செய்திகள்

டெல்லி விமான நிலையம் வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை மோடி வரவேற்றார்

Published On 2018-01-14 08:39 GMT   |   Update On 2018-01-14 08:39 GMT
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

புதுடெல்லி:

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரை பிரதமர் மோடி வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு ஆறு நாட்கள் அரசுமுறைப்பயணமாக இன்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த அவரி பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அப்போது இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

இந்த பயணத்தின் போது நேதன்யாகு டெல்லி தவிர ஆக்ரா, அகதமாபாத் மற்றும் மும்பை நகரங்களுக்கும் அவர் செல்ல இருக்கிறார். தனது இந்திய பயணத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பில் 1700 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, சமீபத்தில் ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News