செய்திகள்

பாராளுமன்ற நிலைக்குழுவில் மருத்துவ கமிஷன் மசோதா: டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

Published On 2018-01-02 09:39 GMT   |   Update On 2018-01-02 09:39 GMT
தேசிய மருத்துவ கமிஷன் மசோதா பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். #NationalMedicalCommissionBill #DoctorsStrike
புதுடெல்லி:

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். இதற்கிடையே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பி கருத்துக்களை கேட்க வேண்டும் என பல்வேறு எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, தேசிய மருத்துவ கமிஷன் மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுப்பி வைத்தார். இதனால், நடப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ள நிலையில், டாக்டர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். #NationalMedicalCommissionBill #DoctorsStrike
Tags:    

Similar News