செய்திகள்

பாராளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக எம்.பி.க்கள் கோ‌ஷம்

Published On 2018-01-02 09:18 GMT   |   Update On 2018-01-02 09:18 GMT
காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலம் புல்ஹமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி முகாம் மீது கடந்த 31-ந்தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று பாகஸ்தானுக்கு எதிராக பா.ஜனதா எம்.பி.க்கள் கோ‌ஷமிட்டனர்.

பாராளுமன்றத்துக்குள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நுழைந்ததும் பா.ஜனதா எம்.பி.க்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். சபை கூடியதும் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான பாதுகாப்பு படை வீரர்களுக்கு சபாநாயகர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வாசித்தார். இது கோழைத்தனமான தாக்குதல் என்று அவர் கடுமையாக தாக்கி பேசினார்.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் குல்பூசன் ஜாதவ் விவகாரத்தில் அவரது மனைவி, தாயார் அவமரியாதை செய்ததற்கு பா.ஜனதா, சிவசேனா எம்.பி.க்கள் பாகிஸ்தானுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். தற்போது 2-வது முறையாக அந்நாட்டுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News