செய்திகள்

ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து சசிகலா மவுன விரதம்: தினகரன் பேட்டி

Published On 2017-12-28 10:47 GMT   |   Update On 2017-12-28 10:47 GMT
சிறையிலிருக்கும் சசிகலா ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து மவுன விரதம் இருப்பதாக சிறை வளாகத்தில் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார். #TTVDhinakaran #Sasikala #Jayalalithaa
பெங்களூர்:

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக டி.டி.வி தினகரன் இன்று காலை பெங்களூர் புறப்பட்டுச் சென்றார். அவரை சந்தித்து விட்டு சிறை வளாகத்தில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு சசிகலாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவதற்காக வந்தேன், வாங்கிவிட்டேன். எதிர்கால திட்டங்களை எடுத்து கூறினேன், அனுமதி அளித்தார். ஜெயலலிதா நினைவு நாளில் இருந்து சிறையில் சசிகலா மவுனவிரதம் இருக்கிறார்.



ஜெயலலிதா மரணத்தில் எவ்வித தவறும் நடக்கவில்லை, பொய் பிரசாரம் செய்கிறார்கள். மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி, அதிகாரம் இருப்பதால் நீடிக்கிறார்கள். கட்சியில் இருந்து ஒருவரை நீக்க பொதுச்செயலாளருக்கே அதிகாரம் இருக்கிறது.

எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம். அரசியலுக்கு யார் வந்தாலும் அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன். பா.ஜ.க.வுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமாரின் சொந்த தொகுதியிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன், அவர் பேசுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். #TTVDhinakaran #Sasikala #Jayalalithaa
Tags:    

Similar News