செய்திகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு 55 லட்சம் ஸ்மார்ட் போன்: அரசு இலவசமாக வழங்குகிறது

Published On 2017-12-11 05:59 GMT   |   Update On 2017-12-11 06:00 GMT
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டுவந்துள்ளது.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி கிராமங்களில் உள்ள இளைஞர்கள், நகரத்தில் உள்ள ஏழை குடும்பத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது.

பல்வேறு தகவல்கள் பெறக்கூடிய வகையில் இந்த செல்போன் வழங்கப்படும். இதற்காக அரசு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டுக்குள் 2 கட்டங்களாக இவற்றை பொதுமக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த செல்போன்கள் ரே‌ஷன் கடை, பஞ்சாயத்து அலுவலகம் போன்றவற்றின் மூலமாக வழங்கப்படும். கலெக்டருடைய நேரடி கண்காணிப்பில் இவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக செல்போன்களை பெறுவதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அது முடிந்ததும் செல்போன்கள் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 லட்சம் ஸ்மார்ட் போன்களை வழங்க முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News