செய்திகள்

மணிப்பூர் மலைக்கிராமங்களில் செல்போன் டவர்கள் அமைக்க வேண்டும் - முகேஷ் அம்பானிக்கு கடிதம்

Published On 2017-11-30 07:08 GMT   |   Update On 2017-11-30 07:09 GMT
மணிப்பூரில் உள்ள மலைக்கிராமங்களில் செல்போன் டவர்கள் மற்றும் இணைய சேவை வழங்க வேண்டும் என முகேஷ் அம்பானிக்கு துணை கண்காணிப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இம்பால்:

உலக முழுவதும் தகவல் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால் இன்னும் சில கிராமங்களில் செல்போன் வசதி கூட இல்லாமல் மக்கள் வசிக்கின்றனர்.

அதே போல் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பல மலைப்பகுதிகளில் தகவல் தொழில் நுட்பம் மிகவும் குறைவாக உள்ளது. இணைய சேவை இல்லாததால் மக்கள் எந்தவோரு விண்ணப்பத்தை சமர்பிக்கவும் இரண்டு நாள் பயணம் செய்து மாவட்ட தலைமையகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் செல்போன் டவர்கள் இல்லாததால் மற்ற பகுதிகளில் உள்ள மக்களை தொடர்பு கொண்டு பேசுவது மிகவும் கடினமாக உள்ளது.

இந்நிலையில், அம்மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆர்ம்ஸ்ட்ராங் பேம் ரிலையன்ஸ் ஜியோ முதல்வர் முகேஷ் அம்பானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கிராமத்தில் விரைவில் செல்போன் டவர்கள் மற்றும் இணைய சேவை அமைத்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.



அவரது கடிதத்திற்கு ரிலையன்ஸ் ரியோ அலுவலகத்திற்கு பதில் அளித்துள்ளனர். அதில் இந்த ஆண்டு இறுதிக்குள் அப்பகுதிகளில் செல்போன் டவர்கள் மற்றும் இணைய சேவை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ஆர்ம்ஸ்ட்ராங் பேம் சொந்த செலவில் டூயிசம் மற்றும் டமலாங் பகுதிகளை இணைத்து பாலம் கட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News