செய்திகள்

தலைக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி போலீசில் சரண்

Published On 2017-11-24 10:02 GMT   |   Update On 2017-11-24 10:02 GMT
ஒடிசா மாநிலத்தில் ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி போலீசார் முன்னிலையில் சரணடைந்துள்ளனர்.
புபனேஷ்வர்:

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியைச் சேர்ந்த பிஜால் கத்மே அவரது மனைவி சோனி ஓயாம் ஆகிய இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தனர். பல்வேறு முக்கிய குற்றங்களில் தொடர்புடைய இவர்களின் தலைக்கு தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்கள் ஒடிசா மாநிலம் மான்காந்கிரி மாவட்ட போலீசார் முன்னிலையில் இன்று சரணடைந்துள்ளனர். வன்முறை பாதையில் இருந்து அமைதி வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு அரசு தரும் உதவிகள் அனைத்தும் பிஜால் தம்பதிக்கு வழங்கப்படும் எனவும் கூறினர்.

சரணடையும் மாவோயிஸ்டுகளுக்கு அரசு சார்பில் நிலம், கல்வி மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News