செய்திகள்

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இலங்கை பிரதமர் வழிபாடு

Published On 2017-11-21 13:57 GMT   |   Update On 2017-11-21 13:57 GMT
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மனை வணங்கி வழிபாடு செய்தார்.
பெங்களூரு:

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு வர திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அப்போது பெய்த பெருமழையின் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தனது மனைவி மைத்ரியுடன் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு ரணில் விக்ரமசிங்கே வந்தார். அவருக்கு கோயில் வாசலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு நடைபெற்றுவரும் ’ஷத சன்டிகா யாகம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மூகாம்பிகை அம்மனை பயபக்தியுடன் வணங்கி வழிபாடு செய்தார். இலங்கை பிரதமரின் வருகையையொட்டி மங்களூர் நகரம் மற்றும் மூகாம்பிகை அம்மன் ஆலயம் அமைந்துள்ள கொல்லூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Tags:    

Similar News