செய்திகள்

வீட்டில் தயார் செய்யப்பட்ட விமானத்தில் பயணம் செய்ய அனுமதி

Published On 2017-11-21 07:47 GMT   |   Update On 2017-11-21 07:47 GMT
மும்பையைச் சேர்ந்த அமோல் யாதவ் 4 கோடி செலவில் வீட்டு மொட்டை மாடியில் தாயார் செய்த சிறிய ரக விமானத்தில் பயணம் செய்ய இந்திய விமான போக்குவரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மும்பை:

மக்கள் நெரிசல் மிகுந்த இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள பெட்டி போன்ற அடுக்குமாடி கட்டடத்தின் மொட்டை மாடியில் விமானம் ஒன்றை தயாரிக்க போவதாக 7 ஆண்டுகளுக்கு முன்னரே அமோல் யாதவ் தன்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்தார். தனது சொந்த செலவில் கடந்து ஆறு ஆண்டுகளாக விமானம் ஒன்றை தனது வீட்டு மாடியில் தயாரித்தார்.


கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவருடைய 6 இருக்கை கொண்ட விமானம் தயாராகிவிட்டது. இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதுபோன்ற முதல் விமானம், இதுதான்.இதனுடைய எந்திரம் 13 ஆயிரம் கிலோமீட்டர் உயரம் வரை மேலெழுந்து பறக்கக்கூடியது சக்தியுடையது. அதனுடைய எரிசக்தி கலனில் மணிக்கு 185 கடல் மைல் வேகத்தில் பயணித்து 2 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க தேவையான எரிபொருளை நிரப்ப முடியும்.

தன்னுடைய கனவை நனவாக்க அவர் தன்னுடைய மற்றும் அவருடைய குடும்பத்தினரின் 4 கோடி ரூபாய்  செலவிட்டுள்ளதோடு, சொத்துக்களை விற்றுள்ளார். குடும்ப அணிகலன்களை அடமானம் வைத்துள்ளார்.

இந்நிலையில், விமானத்தை பதிவு செய்து  விமானத்தில் பயணம் செய்ய இந்திய விமான போக்குவரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அவருடைய விமானம் நரேந்திர மோடி மற்றும் மராட்டிய மாநிலம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VT-NMD ( விக்டர் டங்கோ நரேந்திர மோடி தேவேந்திரா ) என்ற பெயரானது அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் சூட்டப்பட்டுள்ளதாக யாதவ் தெரிவித்தார்.


விமானத்தை சோதனை செய்த போது பல பிரச்சனைகள் வந்தது. அப்போது பட்னாவிஸ் மிகுந்த உதவி செய்தார். அவர்கள் கொடுத்த நம்பிக்கையே என் வெற்றிக்கு காரணம் எனக் கூறினார்.

Tags:    

Similar News