செய்திகள்

கவுகாத்தி விமான நிலையத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட விமான ஊழியர்கள் சஸ்பெண்ட்

Published On 2017-11-21 06:47 GMT   |   Update On 2017-11-21 06:48 GMT
கவுகாத்தி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தவறாக நடந்துகொண்ட விமான ஊழியர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

கவுகாத்தி விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகளின் உடைமைகளை விமான நிறுவன  ஊழியர்கள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பெண் பயணியின் லக்கேஜை திரும்பத் திரும்ப சோதனை செய்துள்ளனர். இதனை அந்த பயணி தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.

சோதனை முடிந்ததும் ஊழியர்களில் ஒருவர், பெண் பயணியின் செல்போனில் எடுத்த போட்டோக்களை அழித்துவிடும்படி கூறியுள்ளார். அழித்துவிட்டதாக கூறியபோதும், திடீரென செல்போனை பறித்த ஒரு ஊழியர், போட்டோக்களை அழித்துள்ளார்.

விமான ஊழியர் நடந்துகொண்ட விதம் குறித்து அந்தப் பெண் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அத்துடன் இண்டிகோ நிறுவனத்திலும் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண் பயணிக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
Tags:    

Similar News