செய்திகள்

சீருடை அணியாததால் மாணவனின் ஜீன்ஸ் பேண்டை வெட்டிய கொடுமை: கால்களில் காயம்

Published On 2017-11-18 07:31 GMT   |   Update On 2017-11-18 07:31 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் பள்ளிச் சீருடை அணிந்து செல்லாத 11 ம் வகுப்பு மாணவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் நகரைச் சேர்ந்த வினோத் பால் என்பவரின் மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் பள்ளிக்கு சீருடை அணியாமல் சென்றுள்ளான். இதனால் பள்ளி நிர்வாகத்தினர் சிறுவனை வகுப்பறைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.


மேலும், சிறுவன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கத்திரிக்கோலால் வெட்டினர். இதனால் சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறுவனின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். சிறுவனை வீட்டிற்கு அனுப்பாமல் தண்டனை கொடுத்த பள்ளி நிர்வாகத்தின் கொடூரமான செயலை கண்டித்து அவனது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சிறுவனின் ஜீன்ஸ் பேண்டை வெட்டும் போது தவறுதலாக காலில் வெட்டுவிழுந்ததாக பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். ஆனால் சிறுவனை துன்புறுத்தியதாக பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



மாணவன் தாக்கப்பட்டதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  பள்ளிச் சீருடை அணிந்து செல்லாத 11 ம் வகுப்பு மாணவனுக்கு கொடுக்கப்பட்ட இந்த தண்டனை அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News