செய்திகள்

இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் - பில் கேட்ஸ்

Published On 2017-11-17 10:12 GMT   |   Update On 2017-11-17 10:12 GMT
இந்தியாவில் தற்போது இருக்கும் கல்வி முறையை மாற்றி தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அவர் கூறியாதாவது:-

இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றை கட்டுவதும் மட்டும் முக்கியமல்ல. மக்களை பயன்படுத்த வைப்பதே பெரிய சவாலாகும். அவர்கள் அதை பயன்படுத்தினால் மட்டுமே அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.



இந்தியாவில் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது இங்கு நடைமுறையில் இருக்கும் கல்வி முறையாகும். நான் இதை எதிர்பார்க்கவில்லை. அதன் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும். நாங்கள் இந்தியாவில் கல்விக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பாக முடிவு செய்யவில்லை. இங்குள்ள பலர் கல்விக்கு அதிக அளவு நன்கொடை வழங்கி வருகின்றனர். அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எண்ணி பெருமையாக இருக்கிறது.

இவ்வாறு பில் கேட்ஸ் பேசினார்.

கேட்ஸ் நேற்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். நாட்டில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவு நடத்தப்பட வேண்டும். மற்றும் இந்தியாவில் உள்ள கிராமங்களை மேம்படுத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என ராஜ்நாத் பில் கேட்ஸை வலியுறுத்தினார்.



மேலும், இன்று உத்தரப்பிரதேசம் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார் பில் கேட்ஸ். லக்னோவில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் சென்றார். அவரது வருகைக்கு யோகி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் மற்றும் பில் கேட்ஸ் பங்கேற்றனர். மாநிலத்தில் புதிய தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்தனர். இந்த கூட்டத்தில் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News