செய்திகள்

பெண்களுக்கு எதிராக குற்றங்களை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு: மராட்டிய அரசு முடிவு

Published On 2017-10-18 23:30 GMT   |   Update On 2017-10-18 23:30 GMT
பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கு ஏற்ற வகையில் புலனாய்வு குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை:

மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருகின்றன. கற்பழிப்பு, மானபங்கம், குடும்ப வன்முறை, தற்கொலைக்கு தூண்டப்படுதல் போன்ற பல வழக்குகளில், பெண்களிடம் விசாரணை மேற்கொள்வதில் ஆண் போலீஸ் அதிகாரிகளுக்கு சங்கடம் ஏற்படுகிறது. மேலும் பெண்கள் அவர்களிடம் வெளிப்படையாக பிரச்சினைகளை கூற தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வழக்குகளை முடிப்பத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுபோன்ற வழக்குகளில் எளிதில் தீர்வு காண்பதற்கும், பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கும் ஏற்ற வகையில் புலனாய்வு குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி மாவட்டந்தோறும் 16 பேர் கொண்ட புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 4 அதிகாரிகளும், 12 போலீஸ்காரர்களும் செயல்படுவார்கள்.

இந்த குழுவிடம் பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒப்படைக்கப்படும். தற்போது முதற்கட்டமாக மும்பை, தானே, புனே, நாக்பூர் நகரங்கள் உள்பட 7 பகுதிகளில் நிலுவையில் உள்ள மைனர் பெண்களுக்கு எதிரான குற்றவழக்குகள் இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 
Tags:    

Similar News