செய்திகள்

உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டோக்கியோ - புதுடெல்லிக்கு 43-வது இடம்

Published On 2017-10-14 17:50 GMT   |   Update On 2017-10-14 17:50 GMT
உலகில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தில் டோக்கியோவும், 43-வது இடத்தில் புதுடெல்லியும் இடம்பெற்றுள்ளது.
புதுடெல்லி:

பொருளாதார உளவுப்பிரிவு அமைப்பு, உலகின் பாதுகாப்பான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் டிஜிட்டல், சுகாதாரம், உள்கட்டமைப்பு, தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.  இந்த ஆய்வின் ஆராய்ச்சியளரான கிறிஸ் க்ளாக் கூறுகையில்,

உலகில் பெரும்பாலான நகரங்கள் பொருளாதார ரீதியான நடவடிக்கையை அதிகரிக்கும் நிலையில், மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பட்டியலில் இந்தியாவில் புதுடெல்லி மற்றும் மும்பை நகரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதில் புதுடெல்லிக்கு 43-வது இடத்திலும் மும்பை 45-வது இடத்திலும் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் இடத்திலும், 2-வது இடத்தில் சிங்கப்பூர், 3-வது இடத்தில் ஒசாகா, 4-வது இடத்தில் டொண்டா, 5-வது இடத்தில் மெல்போர்ன் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது.

பட்டியலின் கடைசி 10 இடத்திற்குள் டாகா, பாகிஸ்தானின் கராச்சி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளது.

Tags:    

Similar News