செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் சப்-இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் - ரூ.1 லட்சம் அபராதம்

Published On 2017-10-14 10:36 GMT   |   Update On 2017-10-14 10:36 GMT
மகாராஷ்டிரா மாநிலம் சங்கலி மாவட்டத்தில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் சங்கலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி, தனது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சிறுமியை கற்பழித்தார்.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரேம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பிரேம் குமார் சிறுமியை கற்பழித்தது தெரியவந்தது.

உஸ்மானாபாத் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், பிரேமிற்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Tags:    

Similar News