செய்திகள்

தேவைப்பட்டால் மற்றொரு சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தப்படும்: ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

Published On 2017-09-25 17:28 GMT   |   Update On 2017-09-25 17:28 GMT
தேவைப்பட்டால் மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

தேவைப்பட்டால் மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் ஆபரேஷன் நடத்தப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதையடுத்து, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில வாரங்களாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு நமது ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள நமது ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் மீது தேவைப்பட்டால் மீண்டும் ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு செப்டம்பர் 28 மற்றும் 29-ம் தேதி பாகிஸ்தான் ஆதரவில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளை குறிவைத்து இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற ஆபரேஷனை நடத்தி 40க்கு மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News