செய்திகள்

அரியானா மாநிலத்திற்கு 119 கோடி ரூபாய் கடன் வழங்கியது நபார்டு வங்கி

Published On 2017-09-22 12:21 GMT   |   Update On 2017-09-22 12:21 GMT
அரியானா அரசிற்கு வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கி (நபார்டு) 119 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் சாலை மற்றும் பாலங்கள் கட்டுவதற்காக தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு)  119 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

இதில் 28.25 கோடி ரூபாயை அம்பலா, பஞ்சுக்லா, சொனேபட், யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய 5 மாவட்டங்களில் 7 பாலங்கள் மற்றும் ஒரு சாலை அமைப்பதற்காக ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள தொகை 52 அரசு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் 115 மருந்தகங்கள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த தொகை மூலம் ரேவாரி மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப்போவதாகவும் தெரிவித்தனர். இதன் மூலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள 14 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். மேலும் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த வேலை இல்லாதவர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் கூறினர்.

Tags:    

Similar News