செய்திகள்

ஒடிசா: பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

Published On 2017-09-18 11:22 GMT   |   Update On 2017-09-18 11:22 GMT
ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்களில் பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 மாவட்டங்களில் 22 மாவட்டங்களை எச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்று தாக்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சல் நோய்க்காக எஸ்.சி.பி.மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் ஒருவரும், புவனேஷ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததையடுத்து இந்நோயின் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஒடிசாவை தாக்கிய பன்றிக்காய்ச்சல் நோய்க்கு 13 பேர் பலியாகினர். ஆனால், இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களுக்குள் 52 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News