செய்திகள்

மோடி மந்திரிசபையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 12 மந்திரி பதவி

Published On 2017-09-03 22:49 GMT   |   Update On 2017-09-03 22:49 GMT
மத்திய மந்திரிசபையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடியையும் சேர்த்து 12 மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இதற்காக உத்தரபிரதேசத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா, மகேந்திரநாத் பாண்டே, சஞ்சீவ் பல்யான் ஆகிய 3 பேரும் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தனர்.

அதே நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சத்யபால் சிங்கும், சிவபிரதாப் சுக்லாவும் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

இதன்மூலம், மத்திய மந்திரிசபையில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு பிரதமர் மோடியையும் சேர்த்து 12 மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

மோடியின் மந்திரிசபை இப்போது 76 பேரை கொண்டுள்ளது. அவர்களில் பிரதமர் உள்பட 28 பேர் கேபினட் அந்தஸ்தும், 11 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரி அந்தஸ்தும், 37 பேர் ராஜாங்க மந்திரி அந்தஸ்தும் வகிக்கிறார்கள்.

மத்திய மந்திரிசபையில் இப்போது பெண் மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆகும்.

நிர்மலா சீதாராமன் ராணுவ மந்திரி பதவி ஏற்றுள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவில் 2 பெண்கள் இடம் பெறுகிறார்கள். ஒருவர் நிர்மலா சீதாராமன், மற்றொருவர் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ். 
Tags:    

Similar News