செய்திகள்

சிம்லாவில் கடும் நிலச்சரிவு: வாகனங்கள் மண்ணில் புதைந்தன - வீடியோ

Published On 2017-09-02 16:49 GMT   |   Update On 2017-09-02 17:05 GMT
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் மண்ணில் புதைந்தன.
சிம்லா:

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் மண்ணில் புதைந்தன.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிம்லா மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சிம்லா புறநகர்ப் பகுதியான தல்லி பகுதியில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தல்லி-ஷோகி சாலையில் பாறைகளுடன் மண் சரிந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆப்பிள் ஏற்றிச் சென்ற நூற்றுக்கணக்கான லாரிகள் சாலையின் இரு புறங்களிலும் ஸ்தம்பித்து நிற்கின்றன.

சுமார் 8 வாகனங்கள் மண்ணில் புதைந்தன. 3 வீடுகள் மற்றும் ஒரு கோவில் சேதமடைந்துள்ளன. சாலையில் குவிந்து கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றுவதற்காக எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ, யாரும் காயம் அடைந்ததாகவோ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

நிலச்சரிவின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News