செய்திகள்

அரியானா சாமியார் மகளுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் - கைது செய்ய போலீசார் தீவிரம்

Published On 2017-09-01 08:07 GMT   |   Update On 2017-09-01 08:07 GMT
கற்பழிப்பு குற்றத்திற்காக தற்போது சிறையில் இருக்கும் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம்மின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ரோதக்:

அரியானா மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் இரண்டு சிறுமிகளை கற்பழித்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், 38-க்கும் மேற்பட்டோர்கள் பலியாகினர்.

இந்த நிலையில், சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் என்பவரையும் கைது செய்ய அரியானா போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க ஹன்பிரீத் இன்சானுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

சாமியார் ராம் ரகீம் பஞ்சகுலா நீதிமன்றத்தில் இருந்து தப்பிச்செல்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக ஹனிபிரித் இன்சாமுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாமியார் ரகீமுடன் தான் தங்கியிருக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளிடத்தில் இன்சாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதிகாரிகள் மறுத்ததால் சிறைத்துறை அதிகாரிகளிடமும் இன்சாம் சண்டையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
Tags:    

Similar News